கள்ளக்காதலனுடன் சேர்ந்து, காதலி செய்த செயல்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

5 hours ago
ARTICLE AD BOX

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம், மாமலைக்கண்டம், எளம்பளச்சேரி பகுதியில் 37 வயது மாயா என்பவர் வசித்து வருகிறார். ஆதிவாசி சமூக பெண்ணான இவர், திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வந்தார். ஆனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் மாயா, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் மலையாற்றூர் பகுதியில் வசித்து வரும் 33 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஜோன்சன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ஜோன்சனும், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று இருவரும் வழக்கம் போல் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் இதனால் ஆத்திரமடைந்த ஜோன்சன், மாயாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், மாயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜோன்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read more: “என்ன யாராவது காப்பாத்துங்க” புதரில் இருந்து கேட்ட அலறல் சத்தம்; தெரியாத நபருடன், பைக்கில் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…

The post கள்ளக்காதலனுடன் சேர்ந்து, காதலி செய்த செயல்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article