ARTICLE AD BOX
வீட்டில் மீதியாக இருக்கும் பிரட் வைத்து ஒரு அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். ஈவ்னிங் நேரத்தில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
தேவையான பொருட்கள்
பிரட்
எண்ணெய்
உருளைக்கிழங்கு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
மஞ்சள் தூள்
காஷ்மீரி மிளகாய் தூள்
சீரக தூள்
தனியா தூள்
கரம் மசாலா தூள்
உப்பு
சாட் மசாலா தூள்
கொத்தமல்லி இலை
கடலை மாவு
மிளகாய் தூள்
ஓமம்
பேக்கிங் சோடா
செய்முறை
ஒரு அகலமான பானில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்தால் உருளைக்கிழங்கு மசாலா தயார் செய்து வைக்கவும்.
இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதில் ஒரு துண்டின் மீது உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி அதன் மேலே மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி இரண்டாக கட் செய்யவும்.
பிரட் பக்கோடா | Bread Pakoda Recipe In Tamil | Tea Time Snacks | Pakoda Recipes | Evening Snacks
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஓமம் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.
கட் செய்த சான்விச்சை தயார் செய்த கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணையில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரட் பக்கோடா தயாராகிவிடும்.