புதிய வருமான வரி மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல்

2 hours ago
ARTICLE AD BOX

தற்போதுள்ள ஆறு தசாப்த கால பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்ட புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று (பிப் 7) ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வருமான வரி மசோதா, திங்கள்கிழமை (பிப் 10) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: New income-tax bill gets Cabinet nod; to be tabled in Parliament next week

 

Advertisment
Advertisement

புதிய வருமான வரி மசோதா, வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் மொழி மற்றும் அமலாக்கத்தை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொண்டு வரப்பட்ட வருமான வரி விகிதங்களின் மாற்றம், மாற்றப்பட்ட அடுக்குகள், டி.டி.எஸ் உள்ளிட்டவை இதில் பிரதிபலிக்கும் என்று நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பாரதிய தண்ட சன்ஹிதாவுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதாவை அரசாங்கம் முன்பு அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். "புதிய வருமான வரி மசோதா 'நியாயா'வின் அதே உணர்வை முன்னெடுத்துச் செல்லும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய மசோதா, அதன் அத்தியாயங்கள் மற்றும் சொற்கள் அடிப்படையில், தெளிவாகவும் நேரடியாகவும் இருக்கும். இது வரி நிர்வாகத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், வருமான வரித் துறையானது வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வு செய்ய ஒரு உட்குழுவை உருவாக்குவதாக அறிவித்தது. மொழியை எளிமைப்படுத்தல், வழக்குகளை குறைத்தல் போன்றவற்றை ஆராய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து சுமார் 6,500 பரிந்துரைகள் மற்றும் உள்ளீடுகளை இந்தக் குழு பெற்றது.

இதற்கு முன், வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்த அரசு பலமுறை முயற்சித்தது. 2018 இல், ஒரு புதிய நேரடி வரி சட்டத்தை உருவாக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. அது 2019 இல் அதன் அறிக்கையை சமர்பித்தது.

டி.டி.சி-யை முன்னர் இருந்த UPA I அரசாங்கம் முன்மொழிந்தது. ஆகஸ்ட் 2009 இல் ஒரு வரைவு மசோதா முன்மொழியப்பட்டது. அது 2010 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, 2012 மற்றும் 2014 இல் இரண்டு முறை திருத்தப்பட்டது. ஆனால் மக்களவை கலைக்கப்பட்டவுடன் இது காலாவதியானது.

- Aanchal Magazine

Read Entire Article