Delhi Election: முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பின்னடைவு - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

3 hours ago
ARTICLE AD BOX
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி ஆட்சியை பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 9 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

Delhi Election Result Live: டெல்லி அரியணையை நெருங்கும் பாஜக... அதிர்ச்சியில் ஆம் ஆத்மி! |Live Updates
கெஜ்ரிவால், மோடி, ராகுல் காந்தி

ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலை மூன்று முறை வென்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி 21 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து பின்னடைவை சந்தித்து இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் 1 இடத்தில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்திருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா முன்னிலை வகிக்கிறார்.

கெஜ்ரிவால், அதிஷி

கால்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி பின்னடைவை சந்தித்திருக்கிறார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல, ஜாங்புரா தொகுதியில் போட்டியிட்ட டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்கள் பின்னடவை சந்தித்துள்ளது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article