விராட் வெளியே., ஸ்ரேயாஸ் உள்ளே! இது கடவுளின் விருப்பம்! ஹர்பஜன் சிங் கருத்து!

3 hours ago
ARTICLE AD BOX
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer

ஷார்ஜா : இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் (மகாராஷ்டிரா) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் நிலைத்து ஆடி 96 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 59 ரன்கள் எடுத்து அணி விரைவாக இலக்கை அடைய நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கோலி Out – ஷ்ரேயாஸ் In :

இந்த போட்டியில் விராட் கோலி தனது மூட்டுவலி காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் நாளை கட்டாக் (ஒடிசா) மைதானத்தில் நடைபெறும் 2வது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்ப்பார் என எதிர்பாக்கப்டுகிறது. இந்நிலையில், தனது ஒருநாள் போட்டி ஆட்டம் குறித்து ஸ்ரேயாஸ் பேசுகையில், விராட் கோலி காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை என்பதால் நான் விளையாடினேன். அவர் விளையாடி இருந்தால் நான் விளையாடி இருக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறினார்.

ஹர்பஜன் பேட்டி :

ஸ்ரேயாஸின் இந்த வெளிப்படையான கூற்று பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ” ஷ்ரேயாஸ் ஒரு நல்ல ஆட்டத்திறன் கொண்ட வீரர் என்று பாராட்டினார். அவரது தன்னம்பிக்கை இறுதியில் அவருக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது என குறிப்பிட்டார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற ILT20 கிரிக்கெட் போட்டியின் போது ஹர்பஜன் சிங் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டார்.  அவர் கூறுகையில், ” அணி நிர்வாகம் ஸ்ரேயஸை நீக்க நினைத்தபோது. அவர் அணியில் இடம்பெற ஒரே காரணம் ரோஹித் சர்மா (வலது) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இடது) ஆகியோருடன் வலது-இடது தொடக்க கூட்டணிக்காக ஸ்ரேயாஸ் (வலது) தேர்வாகி இருக்கலாம்.” என்று ஹர்பஜன் கூறினார்.

ஸ்ரேயாஸ் தேர்வு., ஆனால்?

மேலும் , ” அணி நிர்வாகம் ஸ்ரேயஸை அணியில் தேர்வு செய்துவிட்டது. ஆனால், தொடக்க வீரராக அவர் களமிறங்க வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அணி தற்போது ஜெய்ஸ்வாலை அதிகமாக நம்புகிறது என்று நினைக்கிறேன். ஒருவேளை நிர்வாகம் வலது-இடது கூட்டணியை தொடக்கமாக வைத்திருக்க விரும்பலாம். இப்படித்தான் அணி சென்றது. ஆனால் நிர்வாகம் ஷ்ரேயாஸை தொடக்க வீரராக விளையாட விட வைக்க விரும்பவில்லைஅதனால் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராக வைத்திருக்க விரும்புகிறார்கள் என்று என்று நான் நினைக்கிறேன்.

கடவுள் விருப்பம் :

ஷ்ரேயாஸ் தனது திறமையை  நிரூபிக்கும் திறன் கொண்டவர். உலகக் கோப்பையில் அவர் நிறைய ரன்கள் எடுத்தார். ஒரு வீரர் இவ்வளவு ரன்கள் எடுக்கும்போது, ​​தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர் அவரது பார்வையில் சிறந்தவர். எனவே, தான் கடவுளும் அவ்வாறே உணர்ந்து இந்த போட்டியில் களமிறங்க ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். நீங்கள் (அணி நிர்வாகம்) யாரை களமிறக்க வேண்டாம் என்று நினைத்தார்களோ அவர் தான் அத்தகைய ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். அதை இந்திய அணியின் வெற்றிப்பாதைக்கு சீக்கிரமாக  மாற்றினார். அவர் அடித்த 50 ரன்கள், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ” என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

கே.எல்.ராகுல் – ரிஷப் பண்ட் :

அடுத்து கே.எல்.ராகுலை அணியில் எடுத்து ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்காதது குறித்து பேசிய ஹர்பஜன், ” ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர். ஆனால், தற்போது நிர்வாகம் சிந்திக்கும் விதத்தைப் பார்த்தால், விக்கெட் கீப்பர்-பேட்டர் விருப்பமாக கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டது போல தெரிகிறது. எனவே, இப்போது ரிஷப் பண்ட் தனது வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். துருவ் ஜூரெல், சஞ்சு சாம்சன் ஆகியோரும் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். கே.எல். ராகுல் சிறப்பாக செயல்படுவார் என்றும் நம்புகிறேன். ரிஷப் பண்டை பொறுத்தவரை, அவர் 2வது அல்லது 3வது ஒருநாள் அணியில் இருப்பார்” எனவும் ஹர்பஜன் சிங் கூறினார்.

Read Entire Article