ஈரோடு இடைத்தேர்தல்; டெபாசிட்டை உறுதி செய்ய நா.த.க.வுக்கு 6,699 வாக்குகள் தேவை

3 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். அவர் 89,931 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 19,078 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்த தேர்தலில், ஒரு கட்சி தன்னுடைய டெபாசிட்டை உறுதி செய்வதற்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவையாக உள்ளன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 19,078 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், டெபாசிட்டை உறுதி செய்ய அக்கட்சிக்கு 6,699 வாக்குகள் தேவையாக உள்ளன. இதுவரை 13 சுற்றுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. இன்னும் ஓரிரு சுற்றுகளே மீதமுள்ளன.


Read Entire Article