ARTICLE AD BOX
![Varun Chakaravarthy INDvENG](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Varun-Chakaravarthy-INDvENG.webp)
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி நாளை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணமா அமைந்ததே வருண் சக்கரவர்த்தி தான். இந்த டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இதன் காரணமாக அவருடைய கலக்கலான பந்துவீச்சை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய அணி அடுத்ததாக அவரும் ஒரு நாள் போட்டிகள் அணியிலும் தேர்வு செய்தது. ஆனால், முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி விளையாடவில்லை. எனவே, இரண்டாவது போட்டிலாவது அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த சூழலில், அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவது உறுதி என தகவல்கள் கிடைத்துள்ளது. ஏனென்றால், நாக்பூர் கிரிக்கெட் மைதானம் போல கட்டாக் (ஒடிசா) மைதானமும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் மற்றொரு மைதானமாகும். அதோடு, கட்டாக்கில் பவுன்ஸர்கள் குறைவாக இருப்பதால், இங்கிலாந்து அணியின் பேட்டிங் எளிதாக இருக்காது.
ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு துல்லியமான பந்து வீச்சை வெளிப்படுத்த எதுவாக இருக்கும். அதனால், இந்த மைதானமும் இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, வருண் சக்ரவர்த்தி நல்ல பார்மில் இருப்பதன் காரணமா அவரை நிச்சியம் அணி அடுத்த போட்டியில் தேர்வு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.