ARTICLE AD BOX
சென்னை,
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும், அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும் என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் முதல்வர் மருந்தகம் மற்றும் நியாய விலைக் கடைகள், சிங்காரத்தோப்பு அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மொத்த விற்பனை பண்டக சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "முதல்வர் மருந்தகம் என்ற புரட்சிகரமான திட்டத்தின்படி ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திட்டம் விரைவில் முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும், அம்மா மருந்தகங்கள் மூடப்படாது. இவை இரண்டும் தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.