ஈரம் படத்தின் 2ம் பாகமா சப்தம்? ஆதி புது தகவல்

3 days ago
ARTICLE AD BOX

சென்னை: 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரித்துள்ள பிரமாண்டமான படம், ‘சப்தம்’. தமன் இசை அமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அறிவழகன், தமன் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஈரம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதி, அறிவழகன் இணைந்திருக்கின்றனர். வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.
படம் குறித்து ஆதி கூறுகையில், ‘பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகளை அறிவியல் ரீதியாக அணுகி ஆய்வு செய்யும் புதுமையான வேடத்தில் நடித்துள்ளேன். லட்சுமி மேனன் டாக்டராக வருகிறார். இப்படம் வணிகம், கிளாசிக் என்ற இருவகையான அமானுஷ்ய திரில்லர்களின் கலவையாக இருக்கும். மிகவும் முக்கியமாக சப்தம் என்பது மிகப்பெரிய கேரக்டராக இருக்கும்.

ரசிகர்களுக்கு திரையரங்குகளில் மாறுபட்ட திகில் அனுபவத்தை அளிக்கும் வகையில் சப்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஈரம்’ படத்தில் நீர் வடிவில் பேய் இருந்தது. இதில் ஒலி (சப்தம்) வடிவில் அமைந்துள்ளது. மீண்டும் நானும், அறிவழகனும் இணைந்துள்ளதால், இது ‘ஈரம்’ படத்தின் 2வது பாகம் என்று சொல்கின்றனர். அது உண்மை இல்லை. அப்படத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், ‘ஈரம்’ படத்தின் 2வது பாகம் விரைவில் உருவாகும் என்றும், அதற்கான கதையை எழுதிவிட்டதாகவும் அறிவழகன் சொன்னார். அதுபோல் நானும், எனது மனைவி நிக்கி கல்ராணியும் நடித்த ‘மரகத நாணயம்’ படத்தின் 2வது பாகமும் விரைவில் உருவாகிறது’ என்றார்.

Read Entire Article