இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்..

4 hours ago
ARTICLE AD BOX
actor sivakumar and suriya meet ilaiyaraaja

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்..

இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார்.

35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி இளையராஜாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிவகுமார் தங்கசங்கிலி ஒன்றை பரிசாக அணிவித்தார். சூர்யா மற்றும் பிருந்தா இருவரும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சிவகுமார் நடிப்பில் 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜா முதல் முறையாக இசையமைத்தார். இதனைத் தொடர்ந்து சிவகுமார் நடிப்பில் நான் பாடும் பாடல், சிந்து பைரவி, ஆனந்த ராகம், பாசப் பறவைகள், ஒருவர் வாழும் ஆலயம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

82வயதிலும் இசை மீது உள்ள காதலால் இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 15,000-க்குற்கும் மேற்பட்ட பாடல்களையும் இசையமைத்து உள்ளார். ஆம், இவர் இசைக்கு எட்டுத்திசையும் இசையுமே.!

actor sivakumar and suriya meet ilaiyaraajaactor sivakumar and suriya meet ilaiyaraaja

The post இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article