ARTICLE AD BOX
வயதானவர்களுக்கு பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய் வந்தால் அடுத்தபடியாக இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. முடி உதிர்வு, சருமத்தில் சுருக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
இதனால் சர்க்கரை நோய் வருவதை முதலில் தடுக்க வேண்டும். இதற்காக நெல்லிக்காய் அதிகளவு பயன்படுகிறது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தினசரி நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான பல சத்துகள் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.
நீரிழிவு அபாயத்தை குறைத்தல், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தல், செரிமான மண்டலத்திற்கு உதவக் கூடிய தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், உடல் எடையைக் குறைத்தல், அன்டி ஆக்சிடென்ட்ஸை அதிகரித்தல், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற பல பணிகளை நெல்லிக்காய் செய்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, காலை எழுந்ததும் இரண்டு நெல்லிக்காய்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதேபோல், ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு அதை குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என பலரும் இதனை குடிக்கலாம். இதேபோல், உடல் நல பாதிப்புகள் இல்லாதவர்களும் இதை எடுத்துக் கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் பாதிப்பு உருவாவதை தடுக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.