ARTICLE AD BOX
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானதில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். மேலும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது.
தனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை ஆடி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மிகவும் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 முன்னிலை பெற்றுள்ளது.