ARTICLE AD BOX
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தில் ஒன்றிய அரசின் கெயில் இந்தியா லிமிடெட் மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து நடத்திய, 2 நாள் இலவச கண் மற்றும் பொது சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவம், வாய், மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம், எலும்பு சிறப்பு பிரிவு, பல் சிறப்பு மருத்துவம் மற்றும் இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வகையில் சிகிச்சைகள் அளித்தனர்.
மேலும் சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், கண் சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்கு 28 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 1430க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.