ARTICLE AD BOX
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் மது, புகை, குப்பை உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அவனது வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் 10 விதமான கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தவிர்க்க வேண்டிய 10 கெட்ட பழக்கங்கள்
கெட்ட பழக்கங்கள் ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சியில் தடைகளை உருவாக்கும். இதனால் அவர்களது இலக்குகளை அடைவதற்கான திறன் குறையும்.
1. ஒழுக்கமின்மை;
இலக்குகளை அடைவதற்கு ஒழுக்கம் அவசியம். முயற்சியில் நிலைத் தன்மையையும் திட்டங்களைப் பின்பற்றுவதற்கும் ஒழுங்குமுறை முக்கியம். இல்லாவிட்டால் ஒரு நபரால் நீண்ட கால இலக்குகளை அடையவே முடியாது.
2. தள்ளிப்போடுதல்;
தள்ளிப் போடுதல் செயலையும் முன்னேற்றத்தையும் தாமதப்படுத்துகிறது. பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பழக்கம், ஒருபோதும் இல்லை என்ற பழக்கமாக மாறுகிறது. இதனால் மனிதர்கள் தங்கள் பணிகளையும், சவால்களையும் உடனடியாக சந்திப்பதை தடுத்து வெற்றியை நோக்கிய பயணத்தையும் தடுத்துவிடும்.
3. தோல்வி பயம்;
தவறுகளை செய்து விடுவோமோ என்கிற பயம் ஒரு நபரை முடக்கி, ரிஸ்க் எடுப்பதையோ அல்லது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதையோ தடுத்துவிடுகிறது. தோல்வி பயம் உள்ள நபர்கள் செயலை செய்யாமல் விட்டு வளர்ச்சி அடையாமல் போய்விடுவார்கள். மேலும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வதன் அனுபவப் பாடத்தையும் இழக்கிறார்கள்.
4. சுய சந்தேகம்;
எதிர்மறைச் சிந்தனையும், தன்னம்பிக்கை இல்லாமையும், தன்னுடைய திறன்களைத் தொடர்ந்து சந்தேகிப்பதும் வாய்ப்புகளைத் தவற விடுவதற்கு வழிவகுக்கிறது.
5. கவனச்சிதறல்கள்;
சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு அல்லது தேவையில்லாத கவனச்சிதறல்கள் முக்கியமான இலக்குகளில் இருந்து ஒரு மனிதனின் கவனத்தை திசை திருப்புகின்றன. இதனால் உற்பத்தித்திறனை குறைத்து முன்னேற்றத்தையும் தடுத்து விடுகிறது.
6. வரையறுக்கப்படாத இலக்குகள்;
தெளிவான மற்றும் குறிப்பிட்ட குறிக்கோள்கள் இல்லாமல் வெற்றிக்கான திசையும் செல்லும் பாதையும் புரிபடாது. தெளிவற்றக் குறிக்கோள் குழப்பத்திற்கும் வீண் முயற்சிக்கும் வழி வகுக்கும். இதுநாள் அர்த்தமுள்ள விளைவுகளை அடைய மிகக்கடினமாகிவிடும்
7. ஆரோக்கியத்தை புறக்கணித்தல்;
போதிய தூக்கமின்மை, மோசமான உணவு முறை, உடற்பயிற்சி இன்மை போன்ற மோசமான சுகாதார பழக்க வழக்கங்கள் உடல் மற்றும் மன ஆற்றல் மட்டங்களைக் குறைக்கின்றன. இவை ஒருவருடைய செயல் திறனை அதிகமாக பாதிக்கின்றன.
8. பொறுப்புக்களைத் தட்டிக்கழித்தல்;
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிக்கும் நபர்களால் ஒருபோதும் இலக்கை அடையவே முடியாது. சவால்களை சமாளிப்பதற்கும், உத்திகளை மாற்றி அமைப்பதற்கும் தனிப்பட்ட பொறுப்பு மிக முக்கியம்.
9. அப்டேட் செய்து கொள்ளாதது;
காலமாற்றத்திற்கு ஏற்ப ஒருவர் தன்னை அப்டேட் செய்து கொள்ளாமல் பழமைவாதியாக இருந்தால் அவரால் இலக்குகளை அடைய முடியாது. புதிய தொழில்நுட்ப அறிவு, புதிய உத்திகள் போன்றவற்றை போன்றவற்றை கற்றுத்தேற வேண்டும். அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
10. போதுமான ஓய்வெடுக்காமல் இருத்தல்;
இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டு, ஓய்வெடுக்காமல் இருக்கும் நபர்கள் புத்துணர்ச்சியை இழந்து இலக்குகளை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே இந்த 10 பழக்க வழக்கங்களையும் ஒரு மனிதன் மாற்றிக்கொண்டால் அவர் தனது வாழ்வில் இலக்கை அடைவது உறுதி.