ARTICLE AD BOX

அப்பாவுக்கு வந்து பைனான்சியல் ஸ்டேட்டஸ் இருந்துருக்கும். இப்போ வந்து அது மாறிருக்கு. அந்த வகையில யாரா இருந்தாலும் அப்பா மேல கோபம் இருக்கும். அப்பா நிறைய பேருக்கு உதவி செஞ்சாரே. நமக்கு சேர்த்து வச்சிட்டுப் போயிருக்கலாமேன்னு கோபம் இருக்கான்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு நடிகர் பாண்டியனின் மகன் ரகு என்ன சொல்றாருன்னு பாருங்க.
பணத்தோட அருமை: இல்ல. அவரு என்னை விட்டுப் போனதுதான் எனக்கு ரொம்ப கோபம். ஏன்னா எனக்கு பணத்தோட அருமையே தெரியாம அப்பா வளர்த்துட்டாரு. எதா இருந்தாலும் எங்க அப்பா கிட்டேயே வாங்கி செலவு பண்ற மாதிரி வளர்த்துட்டாரு.
இப்போ அவரு இறந்ததுக்கு அப்புறம் நான்தான் சம்பாதிக்கணும். குடும்பத்தைப் பார்த்துக்கணும். சொத்து இருந்தாலும் நாம சம்பாதிக்கணும். எங்க அப்பா சம்பாதிச்சதை விட அதிகமா சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறேன் என்கிறார் ரகு.

ராதாரவி, சரத்குமார், ராமராஜன்: அப்பா இறந்த பிறகு எதுவும் பொருளாதார ரீதியா ஆதரவு வேணுமான்னு சினிமாவுல இருந்து கேட்டாங்களான்னு ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதுக்கு ரகு இப்படி பதில் சொல்கிறார். ராதாரவி பெரியப்பா, சரத்குமார் சார், ராமராஜன் சார் வந்தாங்க. மதுரையில வந்து இறுதிச்சடங்கைப் பார்த்ததால யாருமே அவ்வளவா வரல. எல்லாரும் வந்து டிவில பேட்டிதான் கொடுத்தாங்க.
வலியைத் தாங்க முடியல: அப்புறம் கட்சிக்காரங்க வந்தாங்க. லிவர் பெய்லியர் ஆனதும் 3 தடவை காப்பாத்தியாச்சு. கடைசியில அவர் இறந்துடுவாருன்னு தெரிஞ்சது. அவரு உடம்பு தாங்கல. அவரால அந்த வலியைத் தாங்க முடியல. அவர் கடைசியாக எங்கிட்ட பேசிய வார்த்தை. நல்லா படி.
லட்சியவாதியா இரு: நல்லா வேலை பாரு. வீட்டுல இருக்குற அம்மாவை, பாட்டியை நல்லா பார்த்துக்க. கடைசி வரைக்கும் நான் உன்கூட வர மாட்டேன். உன் படிப்புதான் வரும். இனிமே நீ கவனமா இரு. ஒரு அசால்டா இருக்காதே. லட்சியவாதியா இரு. என்னை மாதிரி குடிக்காதே.
கெட்ட பழக்கம் எதுவும் வச்சிக்காதேன்னு ரொம்ப சோகமா பேசினாரு. நீ பெரிய டைரக்டரா வா. உன்னால எந்தளவுக்கு பெரிய ஆளா வர முடியுமோ அந்த அளவுக்கு வா. நான் வந்து கடவுளா வந்து உன்னை பார்ப்பேன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.