ARTICLE AD BOX
கொண்டைக்கடலை பொதுவாக அனைவரின் வீடுகளிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாகும். இது பல்வேறு சுவையான முறைகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கொண்டைக்கடலையை சமைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 3 முதல் 4 மணி நேரமாவது நன்றாக ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு வேக வைத்தால் மட்டுமே கொண்டைக்கடலையை வேக வைத்து, சமைக்க முடியும். இதனால் காலையில் சமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள்.
அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கொண்டைக்கடலையை சீக்கிரமாக வேக வைக்க ஊற வைக்கும் முறை முக்கியமாக கருதப்படுகிறது. ஒருவேளை கொண்டைக்கடலையை ஊற வைக்க மறந்து விட்டால், வேக வைப்பது கடினம் என்பதால் பலரும் கொண்டைக்கடலை சமைப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம்... ஊறவைக்காமல் கொண்டைக்கடலையை சட்டென வேக வைக்க எளிய முறைகள் உள்ளன. ஊற வைக்க மறந்து விட்டால் கூட, இந்த 5 எளிய வழிகளை பயன்படுத்தி நினைத்த நேரத்தில் கொண்டைக்கடலையை சமைத்து விடலாம்.
இந்த முறைகள் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால், நீங்களும் ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள். இத்தனை நாள் இது தெரியாமல் இருந்து விட்டோமே என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
கொண்டைக்கடலையை ஊற வைக்காமல் வேக வைக்கும் முறை :
1. வெந்நீர் முறை :
ஊறவைக்காமல் கொண்டைக்கடலையை சமைப்பதற்காக, முதலில் அதை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவுங்கள். பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கொண்டைக்கடலையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அதன்பிறகு, அடுப்பை அணைத்து, 1-2 மணி நேரம் வெப்பத்திலேயே ஊற வைத்து விட்டு நீரை வடிகட்டுங்கள். இந்த முறை கொண்டைக்கடலையை வேக வைக்க தேவையான நேரத்தை குறைத்து, மென்மையாக மாற்ற உதவுகிறது.
2. குக்கர் பயன்படுத்தும் முறை :
பிரஷர் குக்கரை பயன்படுத்தி கொண்டைக்கடலையை வேக விடுவது வேகமான மற்றும் எளிய வழியாகும். முதலில், கொண்டைக்கடலையை கழுவி, குக்கரில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடா (Baking Soda) சேர்க்கவும். 4-5 விசில் வரும் வரை அதிக சூட்டில் வேக வைக்கவும். பின்னர் தீயை மிதமாக வைத்து 15 நிமிடங்கள் மேலும் வேக விடவும். பிரஷர் அடங்கிய பிறகு, மூடியை திறந்தால் கொண்டைக்கடலை, நீங்கள் உடனடியாக சமைக்க, கறிகள் மற்றும் சாலடுகளில் பயன்படுத்த தயாராக இருக்கும்.
3. பேக்கிங் சோடா (Baking Soda) அல்லது ஈனோ (Eno)சேர்த்து வேக வைத்தல்
பேக்கிங் சோடா அல்லது ஈனோ சேர்ப்பது கொண்டைக்கடலையின் கடினமான வெளிப்புற தோலை மென்மையாக்க உதவுகிறது. கொண்டைக் கடலையை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீருடன் சேர்க்கவும். அதில் 1/2 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா அல்லது ஈனோ சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, பிரஷர் குக்கரில் வழக்கமான முறையில் வேக விடவும். இந்த முறையால், கொண்டைக்கடலை வேகும் நேரம் குறைவதோடு, மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
4. விரைவான ஊறும் முறை (Quick Soak Method)
ஊறவைக்க மறந்து விட்டால், இந்த விரைவான ஊறும் முறையை முயற்சி செய்யலாம். முதலில், கொண்டைக்கடலையை இரண்டு முறை நன்றாக கழுவுங்கள். பிறகு, ஒரு சூடான பாத்திரத்தில் காய்ச்சி வைத்துள்ள வெந்நீரில், சிறிதளவு உப்பு சேர்த்து, கொண்டைக்கடலையை ஊற்றவும். இதை மூடி வைத்து 1 மணி நேரம் ஊற விடுங்கள். 60 நிமிடங்களுக்குப் பிறகு, கொண்டைக்கடலை நன்கு ஊறி, எளிதாக வேகும் நிலைக்கு வரும். கொண்டைக் கடலையை வேக வைத்து ஆரோக்கியமான உணவுகளாக மாற்றுங்கள்.