ARTICLE AD BOX
இரண்டும் ஓரே விலை தான்.. பேசாம iPhone 16e வாங்காம புது iPad Air 2025-ஐ வாங்கிடலாம் போலயே.. SALE ஆரம்பம்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபேட்களாக அறிமுகமான ஐபேட் ஏர் 2025 (iPad Air 2025) மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இது 11- இன்ச் மற்றும் 13-இன்ச் என்கிற 2 அளவுகளிலும், வைஃபை ஒன்லி மற்றும் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்களிலும் வாங்க கிடைக்கிறது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.59,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.69,900 க்கும், 512 ஜிபி ஆப்ஷன் ரூ.89,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 1 டிபி ஆப்ஷன் ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபேட் ஏர் 11-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.74,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.84,900 க்கும், 512 ஜிபி ஆப்ஷன் ரூ.1,04,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 1டிபி ஆப்ஷன் ரூ.1,24,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை ஒன்லி) வேரியண்ட்டின் விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.79,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.89,900 க்கும், 512 ஜிபி ஆப்ஷன் ரூ.1,09,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 1டிபி ஆப்ஷன் ரூ.1,29,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் ஏர் 13-இன்ச் (வைஃபை + செல்லுலார்) வேரியண்ட்டின் விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.94,900 க்கும், 256 ஜிபி ஆப்ஷன் ரூ.1,04,900 க்கும், 512 ஜிபி ஆப்ஷன் ரூ.1,24,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் ஆப்ஷன் 1டிபி ஆப்ஷன் ரூ.1,44,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 முக்கிய அம்சங்கள்: ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 மாடல்கள் எம்3 சிப்செட் (M3 Chip) உடன் வருகின்றன. அதாவது இது கடந்த ஆண்டு எம்2 சிப்களுடன் அறிமுகமான 6த் ஜென் ஐபேட் ஏர் (6th Gen iPad Air with M2 chips) மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாகும்.
ஆப்பிள் நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஐபேட் ஏர் மாடல்களை 2 வகையான டிஸ்பிளே அளவுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது: 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) மற்றும் 13 இன்ச் (2732×204 பிக்சல்கள்) மாடல்கள். இரண்டுமே ரெடினா ட்ரூ டோன் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
இது 8-கோர் ஆப்பிள் எம்3 சிப் (8-core Apple M3 chip) மூலம் இயங்குகிறது. இதில் 9-கோர் ஜிபியு (9-core GPU) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (16 core Neural Engine) அடக்கம். இந்த ப்ராசஸர் 8ஜிபி ரேம் (8GB RAM) மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (1TB Internal Storage) உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் ஐபேட் ஏர் 2025 மாடலில் உள்ள கேமராக்களை பொறுத்தவரை 4கே 60fps ரெக்கார்டிங் ஆதரவுடன் 12எம்பி ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி சென்சார் உள்ளது. ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் ஏர் மாடல் ஆனது ஐபேட்ஓஎஸ் 18 (iPadOS 18) கொண்டு இயங்குகிறது.
குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டாப் ஐடி, யூஎஸ்பி 4, 5ஜி அல்லது வைஃபை 6இ வேரியண்ட் வகைகள், தண்டர்போல்ட் 3 ஆதரவு மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐபேட் ஏர் 2025 மாடல்கள் ஆனது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது.