கொஞ்சம் கேப் விடுங்க விவோ.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய 4ஜி போன்.. எந்த மாடல்?

4 hours ago
ARTICLE AD BOX

கொஞ்சம் கேப் விடுங்க விவோ.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய 4ஜி போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Wednesday, March 12, 2025, 20:45 [IST]

விவோ (vivo) நிறுவனம் விரைவில் விவோ வி50 லைட் 4ஜி (Vivo V50 Lite 4G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி50 லைட் 4ஜி அம்சங்கள் (Vivo V50 Lite 4G specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் கேப் விடுங்க விவோ..வருகிறது புதிய 4ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (Qualcomm's Snapdragon 685 Soc) வசதியுடன் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் விவோ வி50 லைட் 4ஜி போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி உள்ளது. அதேபோல் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த விவோ வி50 லைட் 4ஜி போன் அறிமுகமாகும்.

6500mAh பேட்டரி உடன் விவோ வி50 லைட் 4ஜி போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W சார்ஜிங் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ வி50 லைட் 4ஜி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய விவோ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Vivo V50 Lite 4G key specifications leaked online: check all details here
Read Entire Article