ARTICLE AD BOX
வேற Earbuds வாங்கிடாதீங்க.. மார்ச் 19 குறிச்சு வைங்க.. 52 மணிநேர பேட்டரி, IP55, ANC, கிரிஸ்டல் அலாய் டிசைன்!
ரியல்மி (Realme) நிறுவனம் அதன் ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் (Realme Buds T200 Lite true wireless earbuds) மாடலின் இந்திய அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில தினங்களில், அதே நாளில் இன்னொரு புதிய ரியல்மி பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.
அது ரியல்மி பட்ஸ் ஏர் 7 இயர்பட்ஸ் (Realme Buds Air 7) மாடல் ஆகும். கடந்த வாரம் ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 2025 மார்ச் 19 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரியல்மி நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது அதே நாளில் ரியல்மி பட்ஸ் ஏர் 7 இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.

இந்த வெளியீடு மதியம் 12 மணிக்கு நடைபெறும். பின்னர் இது இது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். ரியல்மி பட்ஸ் ஏர் 7 மாடல் ஆனது கிரிஸ்டல் அலாய் டிசைன் உடன் வரும். மேலும் இது ஐபி55 ரேட்டிங்கிற்கான சான்றிதழை கொண்டிருக்கும். இது ஐவரி கோல்ட், லாவெண்டர் பர்பிள் மற்றும் மோஸ் கிரீன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்
ரியல்மி பட்ஸ் ஏர் 7 இயர்பட்கள் ஆனது 52dB அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) உடன் வரும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது 12.4 மிமீ டீப் பாஸ் டிரைவரையும் கொண்டிருக்கும். கூடவே 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் LHDC 5.0 தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும் கொண்டிருக்கும்.
ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த இயர்பட்ஸ் (கேஸுடன் சேர்த்து) சிங்கிள் சார்ஜில் 52 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும். மேலும், 10 நிமிட குவிக் சார்ஜ் ஆனது 10 மணிநேரம் வரையிலான பிளேபேக் நேரத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மி பட்ஸ் ஏர் 7 இயர்பட்ஸ் மாடலின் விலை நிர்ணயம் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்.
ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 12.4 மிமீ டைனமிக் பாஸ் ட்ரைவர் (12.4mm dynamic bass driver), தெளிவான கால்களுக்கு டூயல்-மைக் ஏஐ நாய்ஸ் ரிடெக்ஷன் (Dual-mic AI noise reduction) மற்றும் கனெக்ட் செய்யப்பட்ட கேஜெட்களுக்கு இடையில் தடையின்றி மாறுவதற்கான டூயல்-டிவைஸ் இணைப்பு (Dual-device connectivity) ஆகிய அம்சங்கள் உள்ளன.
மேலும் ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) மூலம் உங்களுடைய சூழ்நிலை அடிப்படையிலான ஆடியோ சரிசெய்தல்களை மேற்கொள்ள முடியும். ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை (IPX4 water resistance rating) கொண்டுள்ளன. இது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆக்சஸெரீஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 48 மணிநேரம் வரை மொத்த பிளேபேக்கை (கேஸ் + இயர்பட்கள்) வழங்கும். இருப்பினும் பேட்டரி விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது நீலம், கருப்பு மற்றும் சாம்பல் (வோயேஜ் ப்ளூ, வோல்ட் பிளாக் மற்றும் ஸ்டார்ம் கிரே என சந்தைப்படுத்தப்படும்) ஆகிய மூன்று வாங்க கிடைக்கும்
விலை நிர்ணயம் மற்றும் கோடெக் ஆதரவு மற்றும் ட்ரைவர் மெடீரியல் உள்ளிட்ட முழு அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் மார்ச் 19 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். ரியல்மி அதன் ரியல்மி பட்ஸ் டி200 லைட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 7 இயர்பட்ஸ் வழியாக போட் (boAt), நாய்ஸ் (Noise) மற்றும் ரியல்மியின் சொந்த நார்சோ (Narzo) சீரீஸ் போன்ற பிராண்டுகள் உடனான போட்டியை இன்னும் கடுமையாக விரும்புவது போல் தெரிகிறது.