இதுதான் புதிய Motorola போன்.. Slim டிசைன்.. எந்த மாடல்? இந்தியாவில் எப்போது அறிமுகம்?

6 hours ago
ARTICLE AD BOX

இதுதான் புதிய Motorola போன்.. Slim டிசைன்.. எந்த மாடல்? இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Mobile
oi-Prakash S
| Published: Wednesday, March 12, 2025, 18:35 [IST]

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அடுத்து மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்பு இந்த போனின் படங்கள் மற்றும் ஒரு சில விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதன்படி மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் டிசைனில் வெளியாகும். குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன். பின்பு மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இதுதான் புதிய Motorola போன்.. Slim டிசைன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 Fusion specifications): 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த போனில் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது. அதேபோல் USB-C போர்ட் ஆதரவுடன் புதிய மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்படும்.

மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் உள்ளன. சியான் (Cyan), ப்ளூ (Blue), பிங்க் (Pink) நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 50 Fusion 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது.

அதேபோல் 6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன். இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன்,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். இந்த போனின் கேமராவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. பின்பு இந்த போனின் ரியர் கேமராக்களில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus), அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் 32 எம்பி செல்பி கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) போன்ற பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. தற்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Motorola Edge 60 Fusion images and key specifications leaked online: check details here
Read Entire Article