ARTICLE AD BOX

மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் , ஐபிஎல் தொடரில் பயன்படுத்தும் இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்பாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது,
இம்பேக்ட் பிளேயர் விதி முறையால் ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது. காலப்போக்கில் இது எல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.என தெரிவித்தார் .
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது.�