இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-02-2025

6 days ago
ARTICLE AD BOX


Live Updates

  • 20 Feb 2025 9:23 AM IST

    மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் கலெக்டர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

  • 20 Feb 2025 9:23 AM IST

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  • 20 Feb 2025 9:23 AM IST

    விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் என பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

  • 20 Feb 2025 9:22 AM IST

    கும்பகோணம் மாநகராட்சி மீன் அங்காடியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பறிமுதல். பினாயில் ஊற்றி அழித்தனர்.


Read Entire Article