ARTICLE AD BOX

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (AIIMS) செவிலியர் அலுவலர் (Nursing Officer) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் அல்லது டிஜிஎன்எம் (DGNM) படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மேலும், இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் 12, இரண்டாம் கட்டம் மே 2 ஆகிய நாட்களில் நடத்தப்படும். தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். மாதச் சம்பளம் ரூ.9,300 – 34,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.3,000, எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.2,400, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்க www.aiimsexams.ac.in இணையதளத்தை அணுக வேண்டும். மார்ச் 17, 2025 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.