சாமானிய மக்களுக்கு GOOD NEWS: ஏப்ரல்-1 முதல் குறையப்போகும் விலை… எதற்கெல்லாம் தெரியுமா..?

10 hours ago
ARTICLE AD BOX

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 202- 26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் 40 பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இவையனைத்தும் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வாரியானது 15 லிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செல்போன்கள், LED  மற்றும் LCD வகை தொலைக்காட்சிகளுக்கான இறக்குமதி வரை 20 இலிருந்து 15 சதவீதம் ஆகவும், இறால், மீன் போன்ற கடல் உணவுகளுக்கான இறக்குமதி 15லிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்கள், மிதிவண்டி மற்றும் துருப்பிடிக்காத எக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைய  இருப்பதாக அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 36 முக்கிய மருந்துகளுக்கு அடிப்படை வரிகளில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் புற்றுநோய்பட உயிர் காக்கும் மருந்துகளின் விளையும் குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Read Entire Article