புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

10 hours ago
ARTICLE AD BOX

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 12 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய நாள் நிகழ்வில் புதுச்சேரியில் பல இடங்களில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி,

"புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து இடங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழில் பெயர்ப்பு பலகை இருக்க வேண்டும் என்றார்.

மேலும் அரசு விழா அழைப்பிதழ்களிலும் தமிழ் இடம்பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

Read Entire Article