இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

6 days ago
ARTICLE AD BOX

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து வருகின்றனர். இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல், மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக இன்று கைது செய்துள்ளனர். அவர்களுடைய மூன்று விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், தமிழக முதல்வர் அடிக்கடி கடிதம் எழுதி வருகின்றார். அவ்வப்போது இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் சிலர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்று மாலை சிறையில் அடைக்கப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva
Read Entire Article