இன்று ஒரு நாள் மட்டும்… அனைத்து பல்கலைக்கழகம் & கல்லூரிகளில் கட்டாயம்…! UGC அதிரடி உத்தரவு…!

3 days ago
ARTICLE AD BOX

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்மொழிந்த பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தினத்தை இன்று விமரிசையாக கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்மொழிந்த பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மொழிசார்ந்த கலை நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தலாம். மேலும், தாய்மொழி தின கொண்டாட்டம் தொடர்பான அறிக்கையை யுஜிசி இணையதளத்தில் (www.ugc.ac.in/uamp) பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று ஒரு நாள் மட்டும்… அனைத்து பல்கலைக்கழகம் & கல்லூரிகளில் கட்டாயம்…! UGC அதிரடி உத்தரவு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article