இன்னும் சில நாட்களில் ‘கூலி’ படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!

2 hours ago
ARTICLE AD BOX

நடிகர் ரஜினி இன்னும் சில நாட்களில் கூலி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.இன்னும் சில நாட்களில் 'கூலி' படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரஜினியின் 171 வது படமாகும். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் 'கூலி' படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. அதன்படி பல இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 8) சென்னையிலும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 2025 மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் 'கூலி' படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!அதே சமயம் இன்னும் இரண்டு வாரங்களில் நடிகர் ரஜினி தனது போர்ஷன்களையும் நிறைவு செய்து விடுவார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படமானது 2025 ஆகஸ்ட் மாதம் அல்லது 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article