ARTICLE AD BOX
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மொத்தம் 17 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் மாலை 4 மணி நிலவரப்படி 13 சுற்றுகளின் முடிவுகள் வந்துள்ளன.
இதன்படி, ஆளும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அவர் 89 ஆயிரத்து 867 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரையடுத்து வந்த நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 19,078 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் பெற்ற வாக்குகளைவிட இந்த முறை நா.த.க. கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.