அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி.. 27 ஆண்டுக்கு பின் தலைநகரில் ஆட்சி அமைக்கும் பாஜக!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
08 Feb 2025, 10:59 am

70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி் முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

டெல்லி சட்டமன்ற தேர்தல்
டெல்லி சட்டமன்ற தேர்தல்

இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 40 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியைபிடிக்கவிருக்கிறது பாஜக கட்சி.

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

தோல்வியை சந்தித்த கெஜ்ரிவால்.. ஆட்சி அமைக்கும் பாஜக!

70 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டியாகவே நிலவியது. ஆனால் தற்போதையை நிலவரப்படி ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக வாக்குவேட்டை நடத்திவருகிறது.

ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை என்ற 36 தொகுதிகளை கடந்து 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காமல் பூஜ்ஜியத்தில் முடித்துள்ளது.

முன்னாள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோல மணீஷ் சிசோடியாவும் ஜங்புரா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக பர்வேஷ் வர்மா இருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது. ஆனாலும் முதல்வர் பதவிக்கான ரேஸில் கைலாஷ் கெலட், கபில் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர்.

Read Entire Article