ARTICLE AD BOX

ஏசி பெட்டிகளில் RAC டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் இனி முழுமையான படுக்கை வசதியை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை இந்தியன் ரயில்வே செய்துள்ளது. இதற்கு முன்பாக RAC டிக்கெட் இருக்கும் இரண்டு பயணிகள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டியது இருந்தது. இது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் ஒவ்வொரு RAC பயணிகளுக்கு இரண்டு பெட் சீட், ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை கொண்ட தனிப்பட்ட பேக்கேஜ் கொண்ட வசதியை பெறுவார்கள்.
இந்த நடவடிக்கை பயணிகளுடைய வசதியை மேம்படுத்துவதையும், சமத்துவமின்மை தொடர்பான புகார்களை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி ஒவ்வொரு RAC பயணிக்கும் தனி படுக்கை வசதி கொண்ட சீட்டு கிடைக்கும். இதனால் பயணிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படாது. இந்த நடவடிக்கையானது RAC பயணிகளின் உரிமைகளை பாதுகாப்பதிலும் பயண அனுபவத்தை மேம்படுத்துவதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.