Breaking: தொடரும் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் 14 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி..!!

3 hours ago
ARTICLE AD BOX

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தற்போது தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மன்னார் தெற்கு கடற்பரப்பில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி அவர்களை கைது செய்தது. மேலும் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article