ARTICLE AD BOX

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் ராம்தாஸ் பகுதியை அடுத்த குர்லியன் கிராமத்தில் வசித்து வரும் லாஜர் மாசி என்பவர் இன்று அதிகாலை கௌசாம்பியின் கோக்ராஜ் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை இயக்குனர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.”காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஜெர்மனியில் உள்ள பாபர் கல்சா இன்டர்நேஷனல் தலைவர் ஆன ஸ்வர்ன் சிங் கீழ் வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ முதன்மை புலனாய்வு குழுவுடன் தொடர்பில் உள்ளவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இடமிருந்து வெடிப் பொருட்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 13 வெளிநாட்டு தோட்டாக்கள், 3 கை குண்டுகள், இரண்டு செயலில் உள்ள டெட்டனைட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியை உத்திரபிரதேச சிறப்புப்படை காவல்துறை மற்றும் பஞ்சாப் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் கைது செய்ய முடிந்தது என தெரிவித்துள்ளார்.