ARTICLE AD BOX
இனி மூக்குத்தி அம்மன் 2-வில் தமன்னா..? முற்றிய நயன்தாரா – சுந்தர் சி சண்டை.. நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர் சி, பல காமெடி மற்றும் திகில் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். மேலும், தற்போது இவர் நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் சுந்தர் சி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்பில் காஸ்டியூம் சரியில்லை என்பதற்காக நயன்தாரா உதவி இயக்குனர் ஒருவரை கண்டபடி திட்டியுள்ளாராம். இதனால் கோபமான சுந்தர் சி நயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு ஒரு கட்டத்தில் படக்குழு தமன்னாவை கதாநாயகியாக போட்டு இந்தப் படத்தை எடுத்து முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்தி நின்றுபோன படப்பிடிப்பை தொடங்கி வைத்தாராம். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post இனி மூக்குத்தி அம்மன் 2-வில் தமன்னா..? முற்றிய நயன்தாரா – சுந்தர் சி சண்டை.. நடந்தது என்ன? appeared first on EnewZ - Tamil.