சத்குரு அணிந்திருக்கும் வாட்சின் விலை இவ்வளவா? கணக்கு போட்டு ஆச்சரியமடைந்த நெட்டிசன்கள்!

1 day ago
ARTICLE AD BOX

ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு, விலை உயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரம் அணிந்து கொண்டு சிவன் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்தக் கைக்கடிகாரத்தின் விலை சுமார் ரூ. 9,90,000 இருக்கும் என்று நெட்டிசன்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, கார்ட்டியர் நிறுவனத்தின் வாட்சை அவர் அணிந்திருந்தார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Sadhguru adds touch of luxury with this exquisite watch; here’s how much it costs

 

Advertisment
Advertisements

கார்ட்டியர் நிறுவனமானது அதன் சிறந்த கைவினைத்திறன் மற்றும் வாட்ச்மேக்கிங்கிற்காக அறியப்படுகிறது. பிரஞ்சு நிறுவனமான கார்ட்டியரை, பெரும்பாலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் விரும்பி அணிகின்றனர். இதனை ஒரு சமூக அந்தஸ்தாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த கடிகாரத்தின் சிறப்பு என்ன?

கார்ட்டியர் நிறுவனத்தின் பாஷா டி என்ற இந்த மாடல், 41 மில்லி மீட்டர் ஸ்டீல் கேஸுடன் அமைந்துள்ளது. இதன் மூலம் உறுதித் தன்மையையும், நீடித்த உழைப்பையும் கடிகாரம் வெளிப்படுத்துகிறது. தினசரி பயன்பாடு மற்றும் முக்கிய நிகழ்வுகள் என அனைத்திற்கும் பொருந்திப் போகும் வகையில் இந்த வாட்சை டிசைன் செய்துள்ளனர். 1904-CH MC காலிபர் கொண்ட இந்த வாட்ச், தானியங்கி முறையில் இயங்குகிறது.

இந்த வாட்சின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் வெள்ளி நிற ஃபிளிங்க் டயல் ஆகும். இதன் ஒவ்வொரு அசைவிலும் ஆடம்பரம் வெளிப்படும் வகையில் கார்ட்டியர் நிறுவனம் இந்த வாட்சை வடிவமைத்துள்ளது.

இந்த வாட்சுடன் இரண்டு மாற்றக்கூடிய பட்டைகள் சேர்ந்து வருகின்றன. அதன்படி, ஸ்டீல் பிரேஸ்லெட் வகையிலும், அடர் வெளிர் நிறத்திலான முதலை-தோல் ஸ்ட்ராப்பிலும் இந்த வாட்சின் பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் செல்லும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இதனை அணிந்து கொள்ளலாம். இவற்றை மாற்றிக் கொள்வது சுலபமாக இருக்கும். அதாவது இரண்டு பட்டைகளும் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய மடிப்பு கொக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

வாட்ச் பிரியர்கள் இடையே கார்ட்டியர் நிறுவனத்திற்கு நல்ல மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சத்குரு அணிந்திருக்கும் இந்த வாட்ச், தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Read Entire Article