ARTICLE AD BOX
புதுச்சேரியில் நகராட்சி ஜீப்பை திருட முயன்ற தமிழக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி செஞ்சி சாலை அருகே நகராட்சி அதிகாரியின், ஜீப்பை ஓட்டுநர் காந்திராஜ், 52, என்பவர் நேற்று மாலை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, ஒருவர் ஜீப் அருகே வந்து ஜீப்பை எடுத்து செல்ல முயன்றார். அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை சேர்ந்த சண்முகம், 21, என்பதும், திருச்சங்கோடு பகுதியில், அரசு பஸ் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில், இருந்து ஜாமினில் வெளியில் வந்தவர் என தெரியவந்தது.
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த அவர், ஜீப் திருட முயன்ற போது, பிடிப்பட்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.