இந்தியாவின் முதல் விமான நிலையம் எது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

4 hours ago
ARTICLE AD BOX

இந்தியா வளரும் நாடுகளில் மிக முக்கியமான நாடகும். உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு சந்தையையும் இந்தியா கொண்டுள்ளது. இந்தியா 103 உள்நாட்டு விமான நிலையங்கள், 24 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 10 சுங்க விமான நிலையங்கள் என 137 வணிக விமான நிலையங்களைக் கொண்டது. அந்த வகையில் இந்தியாவின் முதல் விமான நிலையம் குறித்து இப்பதிவில் காண்போம்.

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லே ஏவியேஷன் கிளப் என்றும் அழைக்கப்படும் ஜூஹு ஏரோட்ரோம், இந்தியாவின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1928 ஆம் ஆண்டு தனியார் விமான ஓடுபாதையாக நிறுவப்பட்ட ஜூஹு ஏரோட்ரோம், பின்னர் ஒரு பொது விமான நிலையமாக மாற்றப்பட்டது. 1932 ஆம் ஆண்டு டாடா குழும நிறுவனர் மற்றும் இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியான ஜே.ஆர்.டி டாடா, கராச்சியிலிருந்து மும்பைக்கு முதல் விமானத்தில் பறந்தபோது இங்குதான் தரையிறங்கியது.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் + லவங்கப் பட்டை = பிங்க் டீ... ஒரு கப் தருமே புத்துணர்ச்சி!
airport

"15 வயதில் ஜே.ஆர்.டி. டாடா பிரான்சில் விமானத்தில் பயணம் செய்தபோது, விமானியாக வேண்டும் என்று முடிவு செய்தார். 1932 ஆம் ஆண்டில், கராச்சியிலிருந்து பம்பாய்க்கு தொடக்க விமானத்தில் புறப்பட்டபோது, ​​அவர் இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு முன்னோடியாக இருந்தார்," என்று டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ தளம் கூறுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜூஹு விமான நிலையம் முதன்மை விமான தளமாக செயல்பட்டதோடு ராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது .

இந்தியாவின் முதல் வணிக விமான நிறுவனமான டாடா ஏர்லைன்ஸின் தளமாகவும் ஜூஹு விமான நிலையம் செயல்பட்டதோடு, இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு இது ஏர் இந்தியா என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், அதன் தலைவர் ரத்தன் டாடாவின் தலைமையில் டாடா குழுமம் 2022 இல் விமான நிறுவனத்தை மீண்டும் கையகப்படுத்தியது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் போன்ற பெரிய, நவீன விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக இந்த விமான நிலையம் சிறிது காலம் செயல்பட்டது .இன்று, ஜூஹு விமான நிலையம் வணிக விமானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, மேலும் விஐபி இயக்கங்களுக்கான தளமாக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: 5 சிறுநீரகங்களுடன் வாழும் விஞ்ஞானி!
airport

தற்போது ராஜீவ் காந்தி விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இது 5500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் மார்ச் 23 அன்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலகின் சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

தற்போது மிகப்பெரிய விமான நிலையங்கள் இருந்தாலும் முதன்மை என்பதற்கு எப்பொழுதுமே சிறப்பு அதிகம். சரிதானே?

Read Entire Article