இந்தியா மட்டும் என்ன ஸ்பெஷலா? வெளிநாட்டு அணிகள் இதை செய்தே ஆகனும் – இன்சமாம் வேண்டுகோள்

5 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ஆண்டுதோறும் கோலகாலமாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரானது இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் 18-வது ஐபில் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.

இந்தியாவிற்கு யாரும் விளையாட போகக்கூடாது : இன்சமாம் உல் ஹக்

எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரானது துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் வேளையில் இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று ஆதரவளிக்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் ஒரு விசித்திரமான கருத்தினை பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஐபிஎல் தொடரின் போது உலகில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டும் எந்த நாட்டிற்கும் சென்று அவர்களுடைய டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் அவர்களுக்கு அந்த அனுமதியை வழங்குவதில்லை.

எனவே அவர்களை போன்று எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு தங்கள் நாடு வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்திய வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்காத போது மற்ற நாடுகள் ஏன் இந்தியாவிற்கு சென்று விளையாடனும்? அவர்களைப் போன்ற நிலைப்பாட்டை நாம் ஏன் எடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சர்வதேச போட்டியிலிருந்தும், ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஒரு வீரர் முழுமையாக ஓய்வு பெற்றால் மட்டுமே வெளிநாட்டு தொடரில் பங்கேற்கலாம் என்ற விதிமுறையை வைத்துள்ளதாலே இந்திய வீரர்கள் வேறு எங்கும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்று விளையாடுவதில்லை. ஆனால் இதனை தனிப்பட்ட முறையில் குறிவைத்து குற்றம் சாட்டும் வகையில் இன்சமாம் அளித்துள்ள இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : 2021இல் திரும்பி வந்துடாதன்னு மிரட்டுனாங்க.. இந்திய அணியில் கம்பேக் கொடுத்தது பற்றி வருண் பேட்டி

இந்தியாவில் ஐபிஎல் ஆரம்பிக்க இருக்கும் இவ்வேளையில் அடுத்த மாதமே பாகிஸ்தானில் பி.எஸ்.எல் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் இருக்கும் மவுசு பாகிஸ்தான் பிரீமியர் லீக்கிற்கு 10% சதவீதம் கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

The post இந்தியா மட்டும் என்ன ஸ்பெஷலா? வெளிநாட்டு அணிகள் இதை செய்தே ஆகனும் – இன்சமாம் வேண்டுகோள் appeared first on Cric Tamil.

Read Entire Article