ARTICLE AD BOX

image courtesy:twitter/@ICC
சிட்னி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
முன்னதாக அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கூப்பர் கோனோலி பேட்டிங்கில் ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மேலும் பீல்டிங்கிலும் ரோகித் சர்மாவின் கேட்சை தவறவிட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்தும், தான் அவுட்டானது குறித்தும் ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கோனோலி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா கேட்சை தவற விட்டது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அது விளையாட்டின் அங்கம் என்றும் அவர் நேர்மறையாக பேசியுள்ளார்.�
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஷமி காரணத்தாலேயே உலகத்தரம் வாய்ந்த பவுலராக இருக்கிறார். அவர் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். நாளின் இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்தப் போட்டியில் விளையாடினோம். அதில் எங்களுடைய அணி எடுத்து செல்வதற்கு நிறைய பாடங்கள் கிடைத்தன. கிரிக்கெட்டில் நீங்கள் சில நேரங்களில் கேட்ச் விடுவீர்கள். ரோகித் சர்மா கேட்ச்சை தவற விட்டது எனது மனநிலைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.� அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.