இந்தியா vs வங்கதேசம்| ஸ்பின்னர்கள் வந்தாலே திணறல்.. ஒரே பலமாக சதமடித்து மிரட்டிய கில்!

3 days ago
ARTICLE AD BOX
Published on: 
21 Feb 2025, 12:56 am

ஐசிசி தொடர்களில் எப்போதும் அச்சுறுத்தும் அணியாக இருந்துவரும் வங்கதேசத்தை, மீண்டும் ஒரு தரமான சண்டைக்கு பிறகே வென்றுள்ளது இந்திய அணி. வங்கதேசம் தானே எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த இந்தியாவிற்கு எதிராக, ”ஜெயிக்கரமோ, தோக்குறமோ – சண்டை செய்யணும்” என வலுவான போட்டியை கொடுத்துள்ளது வங்கதேச அணி.

கோலி - ரோகித் - கில்
அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், டோட்டல்.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் 28 சாதனைகள்! முழு விவரம்!

சதமடித்து அசத்திய தவ்ஹித்..

2025 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் ஒரு குட்டி ரைவல்ரி வைத்திருக்கும் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்தியா. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. ஆனால் ஏன்-டா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம் என வருத்தப்படும் அளவு, ஒரு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி விரைவாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை மிகப்பெரிய வலையில் சிக்கவைத்தார்.

முகமது ஷமி
முகமது ஷமி

உடன் ஒரே ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பந்தில் விக்கெட்டை சாய்த்த அக்சர் பட்டேல், வங்கதேசத்தை 35 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலைமைக்கு அழைத்துச்சென்றார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் என எல்லோரும் கைக்கு வந்த பந்தை பிடிக்காமல் கோட்டைவிட்டு 3 விக்கெட்டுகள் விழும் வாய்ப்பை பறிகொடுத்தனர்.

AXAR PATEL - WHAT A BOWLER. 🫡

- Axar picked 2 wickets in 2 balls and he missed his Hattrick & immediately Rohit Sharma apologies to him.pic.twitter.com/ZpaKlBFD9j

— Tanuj Singh (@ImTanujSingh) February 20, 2025

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட தவ்ஹித் மற்றும் ஜேக்கர் அலி இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவிற்கு எதிராக டஃப் கொடுத்தனர். 68 ரன்கள் குவித்திருந்தபோது ஜேக்கர் அலி அவுட்டாகி வெளியேற, இறுதிவரை நிலைத்து நின்ற தவ்ஹித் சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு எதிராக சதமடித்த ஒரே வங்கதேச வீரராகவும் முத்திரை பதித்தார்.

தவ்ஹித்
தவ்ஹித்

தவ்ஹித்தின் சதத்தின் உதவியால் 228 ரன்கள் சேர்த்தது வங்கதேச அணி. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

கோலி - ரோகித் - கில்
’இப்படி பண்ணிட்டீங்களே..’ பறிபோன வரலாற்று சாதனை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கேப்டன் ரோகித்!

சதமடித்து மிரட்டிய சுப்மன் கில்..

229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடியாக களம்கண்ட ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா அடுத்தடுத்து 7 பவுண்டரிகளை விரட்ட, சுப்மன் கில் சிக்சர் அடித்து மிரட்டிவிட்டார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 69 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் கொடுத்தனர்.

கில்
கில்

ஆனால் ரோகித் சர்மா 41 ரன்னுக்கு வெளியேறிய பிறகு, ஸ்பின்னர்களை எடுத்துவந்த வங்கதேச கேப்டன் ஷாண்ட்டோ, இந்திய வீரர்களை முழுமையாக கண்ட்ரோல் செய்தார். ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேறிய பிறகு கிட்டத்தட்ட 12 ஓவர்களாக கில் மற்றும் விராட் கோலியால் ஒரு பவுண்டரியை கூட விரட்ட முடியவில்லை. இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்களை எடுத்துவர முடியாமல் கடினப்படுவது அப்பட்டமாக தெரிந்தது.

கோலி
கோலி

பவுண்டரி விரட்டும் முயற்சியில் கோலி அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் இருவரும் 15 மற்றும் 8 ரன்னில் நடையை கட்டினர்.

ஆனால் என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் திடமாக நின்று திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 8வது ஒருநாள் சதமடித்து அசத்தினார். இறுதியாக வந்து அழுத்தத்தை வங்கதேசம் பக்கம் திருப்பிய கேஎல் ராகுல் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என விளாசி, தான் இன்னும் ஃபார்மில் இருப்பதை உறுதிசெய்தார். முடிவில் 46.3 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

கில்
கில்

ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது சர்வதேச சதமடித்த சுப்மன் கில், குறைந்த இன்னிங்ஸில் எட்டிய வீரராக சாதனை படைத்தார். 51 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்த கில், இந்தப்பட்டியலில் இருந்த தவான், விராட் கோலி, கம்பீர், சச்சின் என முன்னாள் சாம்பியன் வீரர்கள் அனைவரையும் முறியடித்து முதலிடம் பிடித்தார்.

கோலி - ரோகித் - கில்
சாம்பியன்ஸ் டிராபி| பாகிஸ்தான் ஜாம்பவான் சாதனை முறியடிப்பு.. உலக சாதனை படைத்த முகமது ஷமி!

அப்பட்டமாக தெரியும் குறைகள்..

இந்திய அணியின் ஒரே பலமாக சுப்மன் கில் மாறியுள்ளார், அதேவேளையில் டாப் ஆர்டர்களில் அனைவரும் வலதுகை பேட்டர்களாக இருப்பதும், அவர்கள் அனைவரும் ஸ்பின்னர்களுக்கு எதிராக கஷ்டப்படுவதும் இந்தியாவிற்கு பெரிய குறைகளாக மாறியுள்ளது.

கில்
கில்

வங்கதேசத்திற்கு எதிராகவே கடினப்பட்டால், நியூசிலாந்து அணியை வீழ்த்துவது பெரிய கேள்விக்குறியாகிவிடும். இந்தகுறைகளை விரைவில் சரிசெய்து, பலம் வாய்ந்த அணியாக இந்தியா மிளிர வேண்டும் என்ற எதிர்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோலி - ரோகித் - கில்
சாம்பியன்ஸ் டிராபி | பிரச்னைகள் தெரிந்தும் திருந்தாத பாகிஸ்தான்.. நியூசிலாந்து அபார வெற்றி!
Read Entire Article