ARTICLE AD BOX

இந்தியாவில் தேர்தல்களில் வாக்குப் பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு செலவு செய்து வந்ததாகவும் இதற்கான 21 மில்லியன் டாலர்களை நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிறைய பணம் இருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு நிறைய வரி போட்டு சம்பாதிக்கிறார்கள். நம்மால் அங்கு தொழில் தொடங்க முடியவில்லை. இந்தியர்கள் ஓட்டுப்போடுவதற்கு அமெரிக்கா ஏன் செலவழிக்க வேண்டும். இந்தப் பணத்தை நிறுத்தி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
21 மில்லியன் டாலர்கள் எப்படி செலவழிக்கப்பட்டது. எந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது. அமெரிக்காவில் பணம் வாங்கி மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி சதித்திட்டம் தீட்டியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 21 மில்லியன் டாலர்கள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
21 மில்லியன் டாலர்கள் எப்படி செலவு செய்யப்பட்ட என்ற விவரத்தை அமெரிக்கா வெளியிடுமா ? அல்லது காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கை கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றுமா?