ARTICLE AD BOX
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் நாளை இந்த தொடரின் ஐந்தாவது மிக முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறன.
பாகிஸ்தான் அணியிடம் இல்லாத பலம் இந்திய அணியிடம் இருக்கு :
ஏற்கனவே இந்து தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.
ஒருவேளை இந்திய அணியுடனான போட்டியில் அவர்கள் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் என்பதனால் இந்த போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தினால் அரையிறுதிக்கு எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேறும் என்பதனால் இந்த போட்டியானது இந்திய அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடியும் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியை ஒப்பிடும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் கை தான் ஓங்கி இருக்கிறது. அதற்கு காரணம் இந்திய அணியில் அதிகப்படியான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச் வின்னர் என்பவர் ஆட்டத்தில் தனியாக நின்று அணியை வெற்றி பெற வைப்பவர். அப்படிப்பட்ட ஒரு வீரர் பாகிஸ்தான் அணியில் இல்லை என்று சாஹித் அப்ரிடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மாஸ்டர்ஸ் லீக்: 222 ரன்ஸ்.. யுவி மாஸ் கேட்ச்.. பின்னி, பதான் பிரதர்ஸ் அசத்தல்.. இலங்கையை வீழ்த்திய இந்தியா
ஏற்கனவே ஐசிசி தொடர்களின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய அணி இந்த விடயத்தில் பாகிஸ்தான் அணியை விட வெயிட் தான் – ஷாகித் அப்ரிடி கருத்து appeared first on Cric Tamil.