ARTICLE AD BOX
உணவு பழக்கம், உணவு தேர்வு, மலம் கழிக்கும் பழக்கம் சரியாக இருந்தால் நிச்சயமாக மூல நோயை முழுமையாக தவிர்த்திட முடியும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
மூல நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த குழாய்களில் வீக்கம் ஏற்படும்போது, அதை நாம் மூலம் என்கிறோம். ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கும்போது அதன் ரத்த குழாய்கள் வீக்கமடைகின்றன. இத்தகைய வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
மலம் கழிக்கும்போது அதிகமான அழுத்தம் கொடுப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை இருப்பது போன்ற காரணங்களால் ஆசனவாய் ரத்த குழாய்கள் வீக்கம் அடைகின்றன. அதேபோல் அடிக்கடி வயிற்றுப் போக்கு பிரச்னை ஏற்படுவது, அதிகமான உடல் பருமன் கொண்டிருப்பது, நார்சத்து உணவுகளையும் தண்ணீரையும் குறைவான அளவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்போது மிக அதிகளவிலான எடைகளை தூக்குவது போன்ற காரணங்களால் ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கிறது. மலம் கழிக்கும்போது ஒரு சிலருக்கு ரத்தம் கசிய கூட தன்மை இருக்கும். ரத்தக்கசிவால் அனீமியா இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புள்ளது.
எப்படி குணப்படுத்த முடியும்?
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து உணவுகள், பழங்கள், கீரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கிழங்குகள், கோதுமை, கோழிக்கறி, காரம் ஆகிய மூன்றையும் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
மூல நோய் குணமாக துத்திக்கீரை:
முருங்கை, வாழைமரம் போல, இந்த துத்திச்செடியும், வேர், பூ, இலை, மட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டகொண்டவை. துத்திக்கீரையின் முதன்மையான நன்மை என்னவென்றால், மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக திகழ்கிறது. உள் மூலமாக இருந்தாலும் வெளி மூலமாக இருந்தாலும் துத்தி கீரையை நன்றாக வதக்கி ஆசனவாய் பகுதியில் வைத்து கட்டும்போது மூல நோய் விரைந்து குணமாகும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
உடல் சூட்டினால் வரும் மூலநோய் குணமாக தலைக்கு குளிக்க வேண்டும். பித்தத்தினுடைய தன்மையை குறைப்பதற்கு தலைக்கு குளிக்கிறது என்ன தேச்சு குளிக்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் சிவராமன். உணவிலும் நிறைய பழங்கள், தண்ணீர் குடிக்கிறது, உரிய சித்த மருத்துவத்தை பின்பற்றினால் மூல நோயை விரட்டியடிக்கலாம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.