ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/01/25/AEJU2lDtc2rE7nlgu1MR.jpg)
ஒவ்வொரு நாளும் அதிக லிட்டர் தண்ணீர் குடிப்பது, நல்ல ஆரோக்கியம், அதிக ஆற்றல் மற்றும் சிறந்த சருமத்திற்கான ரகசியம் என்றும் உடல் எடை குறையும், புற்றுநோயை தடுக்கும் எனக்கூறும் செய்திகளை நாம் அதிகமாக காண்கிறோம். வயது, பாலினம் மற்றும் உடல் பருமனுக்கு ஏற்றவாறு, உடலுக்கு எவ்வளவு தண்ணீர் அவசியம் என்பது கணக்கிடப்படுகிறது. சராசரியாக மனித உடலானது 55-60% நீராலானது.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/E3POIp5QmF0nFUx21zop.jpg)
பலரும் நாம் குடிக்கும் தண்ணீர் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் குடிக்கும் நீரானது மூட்டு இணைப்புகள், கண்கள், உள்ளுறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும்,உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/5nA2UiyrhJoWL5ikId3e.jpg)
நம் உடலில் இருந்து வியர்வை, சிறுநீர், மலம் மற்றும் மூச்சை வெளியிடும் போது என பலவாறு நீர் வெளியேறுகிறது. எப்போது அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறதோ, அப்போது உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும். உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் உடல் வறட்சியுடன் இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கொண்டு நாம் குடிக்கும் தண்ணீர் உடலுக்கு போதவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/AuNTSJI1ZQifn0o92VOr.jpg)
உடலில் லேசாக வறட்சி ஏற்பட்டால், அது அன்றாட பணிகளை பெரிதும் பாதிக்கும். சிறு பணிகளைக் கூட மிகவும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக, மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/mxruclKQJftDI4ft2eCJ.jpg)
ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.தண்ணீர் குடித்த சில நிமிடங்களிலேயே அதிக தாகத்தை அடிக்கடி உணர்ந்தால், அவர்களது உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம். அதோடு நாக்கு, உதடு போன்றவையும் மிகுந்த வறட்சியுடன் இருக்கும். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/1u7ITsHcespgBdDpNBK2.jpg)
உடலில் நீரின் அளவைப் பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் உள்ள நீர் அதிகளவு சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகிறது. உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், மூளையில் உள்ள உணர்ச்சி வாங்கிகள் ஆண்டிடையூரிக் ஹார்மோன்களை வெளியிடுமாறு சமிக்ஞைகளை அனுப்பும். இந்த ஹார்மோன்கள் சிறுநீரகங்களை அடைந்து செல்லுலார் நீர் கால்வாய்களான அக்குவாபோரின்களை உருவாக்கி, சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தத்தில் இருந்து நீரை பிரித்தெடுக்காமல் தக்க வைக்கும். இதன் காரணமாக சிறுநீரின் அடர்த்தி அதிகமாவதோடு, கழிக்கும் சிறுநீரின் எண்ணிக்கையும் குறையும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/lIS7RlOYDqYnNYJ3jS9j.jpg)
அதுமட்டுமின்றி, சிறுநீரின் நிறம் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். முக்கியமாக ஒருவர் 8 மணிநேரத்திற்கும் மேல் சிறுநீர் கழிக்காமல் இருத்தாலோ அல்லது ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.