இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ

22 hours ago
ARTICLE AD BOX

புதிய திரைப்படங்கள் திரையரங்கில் எப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை OTT தளத்தில் பார்த்து ரசிக்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.  

குடும்பஸ்தன்:

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம்.

மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை அதாவது 28 - ம் தேதி ஜீ 5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.  

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்:

லாஸ்லியா கதாநாயகியாக நடித்து கடந்த 24 - ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

போகுமிடம் வெகுதூரமில்லை: 

விமல் கதாநாயகனாக நடித்து அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள திரைப்படம் தான் போகுமிடம் வெகுதூரமில்லை. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியாக உள்ளது.   

Read Entire Article