முதல் சீசனை தூக்கி சாப்பிட்டதா சுழல் 2.? அஷ்ட காளிகளின் ஆட்டம் எப்படி இருக்கு.? விமர்சனம்

4 hours ago
ARTICLE AD BOX

Suzhal 2 Review: அமேசான் ப்ரைம் தளத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 இன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதன் முதல் சீசன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் இரண்டாம் பாகத்தையும் என்ஜாய் செய்யலாமா? வார இறுதியில் பார்ப்பதற்கு ஏற்ற சீரிஸா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

முதல் சீசனை தூக்கி சாப்பிட்டதா சுழல் 2.?

முதல் பாகத்தில் தங்கையை கொன்ற சித்தப்பாவை பழி தீர்த்ததற்காக சிறையில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் தற்காப்புக்காக இந்த கொலையை செய்ததாக வழக்கறிஞர் லால் வாதாடுகிறார்.

இந்த சூழலில் திடீரென அவர் இறந்து போகிறார். அவரை கொன்றது நாங்கள் தான் என எட்டு பெண்கள் போலீசில் சரணடைகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கிறார் கதிர்.

அந்த எட்டு பெண்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் சிறைக்கு வருகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? இந்த கொலைக்கான பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சொல்லி இருக்கிறது இந்த சூழல் 2.

அஷ்ட காளிகள் திருவிழாவும் 8 தெய்வங்களின் பெயர்களை 8 பெண்களுக்கு வைத்து கதையை இயக்குனர்கள் கொண்டு சென்றுள்ளனர். அந்த பொறுப்பை உணர்ந்து அந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அதேபோல் இந்த திருவிழாவை தொடங்கி வைக்கும் லால் இறப்பின் பின்னணி பல ட்விஸ்ட் தருகிறது. யார் கொலையாளி என்பதை இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் ஆடியன்ஸை டென்ஷனில் வைத்திருக்கிறது.

அதற்கேற்றார் போல் வசனங்கள் ஒளிப்பதிவு கதாபாத்திரங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. இதுவே மிகப்பெரும் பலமாக இருக்கிறது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அநீதிகளை எடுத்துக்காட்டி இருக்கும் விதமும் பிளஸ் ஆக உள்ளது. அதனால் இந்த வெப் சீரிஸை தாராளமாக பார்த்து ரசிக்கலாம்.

Read Entire Article