ARTICLE AD BOX
கெளரி கிஷன் முதல் மோனிஷா வரை.. 8 பெண்களையும் நிர்வாணப்படுத்தி.. சுழல் 2 வெப்சீரிஸில் இப்படியா?
சென்னை: புஷ்கர் காயத்ரி எழுதி தயாரித்துள்ள சுழல் 2 வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. முதல் சீசனில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், கதிர், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிரை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் புதுசு தான். மலையாள நடிகர் லால் இந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கயல் சந்திரன், மஞ்சிமா மோகன், சாந்தினி தமிழரசன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக இளம் பெண்களான 8 பேர் தான் இந்த கதையின் முக்கிய அங்கமே. அதிலும், அவர்களில் முதன்மையானவராக முத்து எனும் கதாபாத்திரத்தில் கெளரி கிஷன் நடித்துள்ளார்.

விஜய் டிவி மூலம் பிரபலமாகி மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்த மோனிஷா பிளெஸியும் அந்த 8 பெண்களில் ஒருவராக நடித்துள்ளார். மற்ற பெண்கள் எல்லாமே புதுமுகங்களாக உள்ளனர். அவர்கள் 8 பேரையும் நிர்வாணமாக உடைகளை களைந்து நிற்க வைக்கும் காட்சி ஒன்று இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

8 பெண்களையும் நிர்வாணப்படுத்தி: பெண்கள் சிறப்பு சிறைச்சாலைக்குள் செல்லப்பா (லால்) எனும் வழக்கறிஞரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்து சரண்டராகும் 8 பெண்களையும் சிறைக்குள் அனுப்புவதற்கு முன்பாக அவர்களின் உடைகளை அகற்ற சொல்லி, நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாசமாக பெண் போலீஸார் திட்டும் காட்சிகளை இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ள விதம் பதை பதைக்க வைக்கிறது. ஆனாலும், ஆபாசம் இல்லாத அளவுக்கு கேமரா ஆங்கிளை கழுத்துக்கு கீழே இறக்காமல் ஓடிடியாக இருந்தாலும் சரியாக கையாண்ட விதத்தால் தாராளமாக இந்த வெப்சீரிஸை பலரும் பார்க்கும் படியே கொடுத்திருக்கின்றனர். கெளரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர் மற்றும் கலைவாணி பாஸ்கர் அந்த காட்சியில் செம போல்டாக நடித்துள்ளனர்.

மகளிர் சிறையை தத்ரூபமாக: சுழல் 2 வெப்சீரிஸில் மகளிர் சிறையில் என்னவெல்லாம் கொடுமைகள் நடக்கும் என்றும் புதிதாக வரும் இளம் பெண்களை அங்கே உள்ள தண்டனை கைதிகள் எப்படியெல்லாம் மோசமாக நடத்துவார்கள் என்றும் சிறைக்குள்ளும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடைபெறும் என்பதையும் தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளனர். அந்த 8 பேரில் ஒரு இளம் நடிகை குளித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் பாத்ரூம் கதவை திறந்து உள்ளே நுழைந்து அவரை கட்டிப் பிடிக்கும் காட்சிகளும் இந்த சுழல் 2 வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளது.
