இந்த நாளை குறிச்சு வச்சுக்கோங்க.. சென்னை மக்களுக்கு போன மெசேஜ்.. ரேஷன் கடை போக மறக்காதீங்க!

2 hours ago
ARTICLE AD BOX

இந்த நாளை குறிச்சு வச்சுக்கோங்க.. சென்னை மக்களுக்கு போன மெசேஜ்.. ரேஷன் கடை போக மறக்காதீங்க!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ration

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷனில் மாற்றம்:

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக்கொள்ள முடியும். மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும் ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.

இதுவரை 7 இலட்சத்து 25 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டன. இந்த தாமதங்கள் களையப்பட்டு.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
English summary
Ration shops grievance redressal camp will be held the day after tomorrow in 19 zones in Chennai
Read Entire Article