இந்த சம்மரில் கை நிறைய சம்பாதிக்கணுமா? ரூ. 15,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப்பரான தொழில்!

18 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

இந்த சம்மரில் கை நிறைய சம்பாதிக்கணுமா? ரூ. 15,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப்பரான தொழில்!

News

கோடை காலம் வந்துவிட்டது! வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. பொதுவாக கோடை காலம் தொடங்கிவிட்டால் ஏர் கண்டிஷனர்கள், பிரிட்ஜ் போன்றவற்றுக்கு அதிக தேவை இருக்கும். மறுபுறம் குளிர்பான உற்பத்தியாளர்களுக்கு ஒரே குஷி ஆகிவிடும். மக்கள் வெயில் காலங்களில் வெளியில் செல்லும்போது குளிர்ச்சியான பானங்கள் அல்லது ஜூஸ்களை அதிகம் வாங்குவார்கள். இதை நீங்களும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த கோடைக்கு குறைந்த முதலீட்டில் லாபம் தரக்கூடிய ஜூஸ் கடை தொடங்கலாம். இந்த வணிகம் அனைவருக்கும் ஏற்றதல்ல! மாறாக சீசனல் வியாபாரத்தை விரும்பும் நபர்கள் இதை செய்து லாபம் பார்க்கலாம். இந்த பிசினஸ் தொடங்க என்னென்ன தேவை?, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?, உங்கள் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்த சம்மரில் கை நிறைய சம்பாதிக்கணுமா? ரூ. 15,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப்பரான தொழில்!

ஜூஸ் கடை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடு: கண்டிப்பாக இதற்கு ஒரு மிக்ஸி தேவை. அதுவும் நீங்கள் வாங்கும் மிக்ஸி ஐஸ் பார் போன்ற கடினமான பொருட்களை அரைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சில மிக்ஸிகள் ஓவர் லோடு தாங்காது. இதுபோன்ற மிக்ஸி-களை ஜூஸ் கடைகளுக்கு பயன்படுத்த முடியாது.

Also Read
பெண்கள் வீட்டிலிருந்தே செமையா சம்பாதிக்கலாம்! ரூ.500-இல் தொடங்கக்கூடிய அசத்தல் தொழில்!
பெண்கள் வீட்டிலிருந்தே செமையா சம்பாதிக்கலாம்! ரூ.500-இல் தொடங்கக்கூடிய அசத்தல் தொழில்!

எனவே இதை வாங்குவதற்கு ரூ. 8,000 முதல் ரூ.10,000 வரை செலவாகலாம். அதேபோல ஜூஸ் கடை அமைப்பதற்கு ஒரு கார்ட் அல்லது ஸ்டால் தேவைப்படும். ஒரு வேலை உங்கள் வீட்டையே ஸ்டால் போல மாற்றுகிறீர்கள் என்றால் அந்த செலவும் மிச்சம் தான். அதுவே ஒரு கடையை பார்த்து அங்கு ஜூஸ் கடை தொடங்கி இருக்கிறீர்கள் என்றால் அதற்கு வாடகை செலவாகலாம். இது தவிர கிளாஸ் போன்ற பொருட்களை வாங்குவதற்கு ரூ. 2000 என வைத்துக் கொள்வோம்.

அதன் பிறகு ரூ.2,000-த்தில் இருந்து ரூ.3,000 வரையிலான பழங்களை வாங்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் அவ்வப்போது தீர தீர வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் பழங்கள் ஒரு சில நாட்களில் வீணாவதற்கு வாய்ப்புண்டு. எனவே தேவைப்படும் நேரங்களில் வாங்கிக் கொள்வதால் உங்களுக்கு செலவு மிச்சமாகும். அனைத்து செலவுகளையும் வைத்து பார்க்கும் போது ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை தோராயமாக செலவாகலாம். இவ்வளவுதான் மற்ற பிசினஸ் ஐடியாக்களைவிட இந்த பிசினஸ்-க்கு முதலீடு சற்று குறைவு தான்.

Also Read
ஆதார் கார்டுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா? எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும்? UIDAI சொல்வது என்ன?
ஆதார் கார்டுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா? எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும்? UIDAI சொல்வது என்ன?

எந்தெந்த ஜூஸ் வகைகள் அதிகம் விற்பனையாகும்? இந்த வெயிலுக்கு ஆரஞ்ச் பழங்கள், கரும்பு, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களினால் செய்யப்பட்ட ஜூஸ்களுக்கு அதிக தேவை இருக்கும். அதே நேரம் எலுமிச்சம் பழம், அன்னாசி, இளநீர், நீர்மோர் போன்ற பாரம்பரிய பானங்களையும் விற்பனை செய்யலாம். பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் குளிர்பானங்களை விட பாரம்பரிய முறையில் பிரஷ்ஷாக தயார் செய்யப்படும் ஜூஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்: நீங்கள் வாங்கும் பழங்களை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஐஸ் பார்கள் சுத்தமாக செய்யப்படுகிறதா? என்பதைப் கருத்தில் கொண்டு வாங்குங்கள். இல்லை என்றாலும் நீங்கள் ஒரு பிரிட்ஜ் வைத்து அதில் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளலாம். நீங்கள் பெருநகரங்களில் இருந்தால் உங்கள் கடையை ஆன்லைனில் பட்டியலிடலாம். இந்த சம்மரில் ஆர்டர்கள் குவியத் தொடங்கும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: மாதுளை பழ ஜூஸ் வெவ்வேறு நகரங்களுக்கும் ஏற்ப 30 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு கிடைக்கும் வருமானம் என்பது உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நீங்கள் நிர்ணயம் செய்யக்கூடிய விலையை பொறுத்தது.

இந்த பதிவு குறிப்பாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஐடியா மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு.. உங்களுடைய நிதி ஆலோசிகரை அணுகி, ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் தொடங்கவும்.

Read Entire Article