ARTICLE AD BOX
இந்த 5 ராசிக்காரங்க அடிக்கடி தங்கள் வாயை கொடுத்து வம்பில் மாட்டிகிட்டு முழிப்பாங்களாம்..
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும், அந்த ராசியின் அதிபதிகளைப் பொறுத்தது. அதனால் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் உள்ளனர். அதில் சில ராசிக்காரர்களை மட்டும் பிரச்சனை தேடி வரும். இதற்கு அவர்களின் குணாதிசயம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். அதில் சிலருக்கு பிரச்சனையானது வெளிப்படையாக மற்றும் மனதில் பட்டதை இடம், பொருள் ஏதும் பார்க்காமல் பேசுவதால் சந்திக்கலாம்.
இன்னும் சிலர் உண்மையாக, நேர்மையாக இருப்பதால் பிரச்சனையில் சிக்கலாம். இன்னும் சிலரோ தேவையில்லாத நேரத்தில் மற்றும் இடத்தில் கண்டதை பேசி சிக்கலில் சிக்கலாம். இப்படி சில ராசிக்காரர்கள் தன்னுடைய வாயாலேயே பல பிரச்சனைகளில் வழிய போய் சிக்கிக் கொள்வார்கள். இப்போது அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் எதையும் யோசிக்காமல் பேசக்கூடியவர்கள். அதுவும் இவர்களின் பேச்சு மற்றவர்களின் மனதை சற்று புண்படுத்தும் வகையில் சற்று முரட்டுத்தனமாக இருக்கும். என்ன தான் இவர்கள் நல்ல நினைத்து பேசினாலும், அது மற்றவர்களுக்கு தீங்கை விளைவிக்கும். இதன் மூலம், மற்றவர்களின் பகையையும், வெறுப்பையும் சம்பாதிப்பார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையும், பேச்சில் வல்லமையும் பெற்றவர்கள். இவர்கள் யாருக்கும் பயப்படமாட்டார்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள். இருப்பினும், இவர்களின் தற்பெருமை மற்றும் ஈகோவால் இவர்கள் பேசும் வார்த்தைகள் இவர்களை வம்புகளில் சிக்க வைக்கும். தங்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறும் விஷயங்கள், மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுவதோடு, மன வருத்தத்தை உண்டாக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள், தனது கொள்கைகை எவருக்காகவும் மாற்றமாட்டார்கள். இவர்களுக்கு தங்களின் லட்சியம் தான் முக்கியம். இப்படி மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தனது லட்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், நிறைய விமர்சனங்களுக்கு ஆளாவார்கள். மேலும் இவர்கள் அவ்வப்போது கடுமையாக மற்றவர்களின் மனது புண்படும்படி பேசுவார்கள். இதனால் உறவுகளில் பல சிரமங்களை சந்திப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்கள் தங்களின் தங்களின் வருத்தத்தை மற்றவர்களிடம் பகிர்வது கூட ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் இவர்கள் பழிவாங்கும் விதத்தில் ஒருவரின் குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டுவதால், பலரது பகையை சம்பாதிப்பார்கள். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி, பொறுமையை கையாண்டால், பெரிதாக சாதிக்கலாம்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். வித்தியாசமாக செயல்பட நினைப்பார்கள். பின்விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள். இதனால் மற்றவர்களுடன் ஒரு நல்லுறவு இல்லாமல் போகும். மேலும் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் கோபத்தையும், எரிச்சலையும் எளிதில் சம்பாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)